Monday, December 22, 2025

த.வெ.க தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

நடிகரும், த.வெ.க – வின் தலைவருமான விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து மாநாடு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என பரபரப்பாக கட்சி வேலைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் 41பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசினார்.மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் அழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகம் பனையூரில் செயல்பட்டு வரும், நிலையில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டது.

அதாவது இரவு நேரத்தில் DGP அலுவலகத்திற்கு email மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்படத்தை அடுத்து பனையூருக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர்.போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. விசாரணையில் அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான தகவல் அறிந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். இருப்பினும் காவல்துறையினர் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே இச்சம்பவத்தால் , பனையூரில் சில மணி நேரங்களாக பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News