மும்பையில் இருந்து வாரணாசிக்கு பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து வாரணாசி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக வாரணாசியில் தரையிறக்கப்பட்டதை அடுத்தது பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அங்கு தயார் நிலையில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு, விமானத்தை முழுமையாக சோதனையிட்டது.
சோதனையின் முடிவில் எந்தவொரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்று தெரியவந்தது.
