பிளிங்கிட், பிரபல உணவு டெலிவரி தளமான சொமோட்டோ நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது அதன் கீழ் செயல்பட்டு வருகிறது.
தற்போது வந்துள்ள அப்டேட் என்னவென்றால், விரைவு-வணிக தளமான பிளிங்கிட்டில், வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பிறகும் கூட மேலும் பொருட்களை சேர்க்க முடியும் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம், உங்கள் ஆர்டர் பேக் செய்யப்படுவதற்கு முன்பாக, நீங்கள் விரும்பும் மற்ற பொருட்களையும் சேர்க்க முடியும். இதற்காக கூடுதல் டெலிவரி கட்டணம் இல்லை, மறுபடியும் ஆர்டர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த புதிய அம்சம், ஒருவர் செய்யும் ஆர்டர், பிளிங்கிட் ஹப்-இல் பேக் செய்யப்படும் நேரத்தில், வாடிக்கையாளர்கள் கூடுதல் பொருட்களைச் சேர்க்க அனுமதிக்கிறது.
இது பிளிங்கிட் வெளியிட்டுள்ள சமீபத்திய முக்கியமான தயாரிப்பு அப்டேட்களில் ஒன்றாகும்.
