பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில், பாஜக முன்னாள் அமைச்சர் மனோரஞ்சன் காலியாவின் வீட்டின் வெளியே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி கேமராக்களை கண்காணித்து வருவதாகவும், இது கையெறி குண்டு தாக்குதலா அல்லது வேறு ஏதாவது தாக்குதலா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.