பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் ஒரு சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 12 பேர் பலி கொடுத்து, 27 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று மதியம் 12:39 மணிக்கு நடந்தது.
இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்க கூடும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. எந்தவோர் அமைப்பும் இதற்கு பொறுப்பேற்க முன்வரவில்லை.
