சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து திமுக மூத்த தலைவரும், முதல்வரின் ஸ்டாலினின் தந்தையுமான மறைந்த முதல்வர் கருணாநிதி சிலை மீது பெயின்ட் ஊற்றி அவமதித்தது யார்? காரணம் என்ன? என்பது குறித்து கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.