Friday, March 14, 2025

டெல்லியில் பாஜகவின் வெற்றி வருத்தத்திற்குரியது – பெ.சண்முகம் பேட்டி

டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதால் பாஜக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Also Read : டெல்லியில் பாஜக வென்றால் அது தேசத்துக்கே பின்னடைவு – திருமாவளவன்

இந்நிலையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பாஜக வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்திருப்பது வருத்தத்திற்குரிய செய்தி. இதற்கு I.N.D.I.A. கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே காரணம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே பாஜக-வை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். I.N.D.I.A. கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியை, அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்” என அவர் கூறியுள்ளார்.

Latest news