சேலம் ஐந்துரோடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் வருகை தந்திருந்தார். அப்போது அவருடன் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கேபி.ராமலிங்கம் வருகை தந்தார்.
அப்போது பாஜகவின் முன்னாள் மாவட்ட பார்வையாளர் முருகேசன் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்கு காத்திருந்தார். அப்பொழுது வேகமாக சென்ற கேபி.ராமலிங்கம் அவரது சால்வையை வேகமாக பிடுங்கினார். இதனால் அவர் கீழே விழுவது போன்று நிலைத்தடுமாறினார்.
பாஜகவினரிடையே பாஜக மாநில துணைத்தலைவர் கேபி.ராமலிங்கத்தின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் கேபி.ராமலிங்கத்தின் செயல்பாட்டை கண்டித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.