Friday, March 14, 2025

3 மொழிகளில் தனது படத்தை வெளியிடும் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கலாமா? – தமிழிசை கேள்வி

“மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற அரசியல் கட்சிகளும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், “நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. மூன்றாவதாக வேறு எந்த ஒரு மொழியாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கூட வெளியாகிறது. உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை. ஆனால் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Latest news