மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், முதல்வரின் உருவப்படம் பதிக்கப்பட்ட அப்பா ஸ்டிக்கரை ஒட்ட முயன்ற பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் நாஞ்சில் பாலு உள்பட நான்கு பேரை குண்டுகட்டாக கைது செய்த போலீசார், காவல்நிலையம் அழைத்து சென்றனர். மேலும் காவல்துறையினரின் கைது சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பிதால் பரபரப்பு ஏற்பட்டது.