Tuesday, July 1, 2025

டாஸ்மாக் கடையை இழுத்து மூட முயன்ற பாஜகவினர் கைது

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்திற்கு சென்ற
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

இதனை கண்டித்து, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சாலையில் ஊர்வலமாக வந்த பாஜகவினர் அங்கிருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு இழுத்து மூட பாஜகவினர் முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு போலிசாருக்கும், பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விடுதலை செய்ய வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாவட்டத் தலைவர் அய்யப்பன், மாவட்ட செயலாளர் இளையராஜா உள்ளிட்ட 18 பேரை போலிசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news