விஜயை தங்கள் கூட்டணிக்கு கொண்டுவர பாஜக தலைமை முயற்சி செய்வது அப்பட்டமாக தெரிகிறது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொலை மிரட்டல் இருப்பதாக விஜய்க்கு துணை ராணுவ பாதுகாப்பை வழங்கி, அவரை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினர்.
அதிமுக – தவெக கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்த பாஜக முயல்கிறது என்று கூறிய வேல்முருகன், பாஜகவுடன் விஜய் தன்னை அடகு வைப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.