அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அன்வர்ராஜா. கடந்த 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது இவர் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அவருக்கு சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் பதவியையும் ஜெயலலிதா வழங்கி இருந்தார்.
அன்வர் ராஜாவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அவர் சில கருத்துக்களை வெளியிட்டதால் அவர் அதிமுக வில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதையடுத்து அன்வர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : கொள்கையில் இருந்து அதிமுக தடம் புரண்டு டதால் திமுகவில் இணைந்தேன். அதிமுக வை சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக கூட்டணி வைத்துள்ளது. இதுகுறித்து பலமுறை என் ஆதங்கத்தை கூறியும் அவர் கேட்காததால் திமுகவில் இணைந்தேன் என அவர் கூறியுள்ளார்.