சிவகங்கை காவலர் குடியிருப்பு எதிரே வாகன பழுது நீக்கும் கடையை நடத்தி வந்தார் சதீஷ். இவர் பாஜக சிவகங்கை நகர பாஜக வர்த்தகப் பிரிவு தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் சதீஷை நேற்று இரவு மர்ம கும்பல் அடித்தே கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை தொடர்பாக 5-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசின் நிர்வாக தோல்வி மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.