“போர்க்களத்தில் நிற்கும் தளபதி”…சீமானை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் இருக்கும் நிலையில், தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக கூறப்பட்டது. இதனை சீமான் மறுத்தார்.

இந்நிலையில் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை, அண்ணன் சீமானை போர்க்களத்தில் நிற்கும் ஒரு தளபதியாகத்தான் பார்க்கிறேன். கொள்கைக்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டோடு தைரியமாக இருப்பவர் சீமான் என்று புகழாரம் சூட்டினார்.

எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன், அண்ணன் தமிழில் தேசியத்தை பார்க்கிறார் என்றும் அண்ணாமலை பேசினார்.