2026ம் ஆண்டு தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும், கூட்டணி ஆட்சி தான் அமையும்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன். கருணாநிதி, ஜெயலலிதாவைப் போல் நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொள்ளட்டும்.
தமிழகத்தில் இன்றைக்கு திமுக, அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, தவெக என 5 முனை போட்டி நிலவுகிறது. 5 கட்சிகளும் வெவ்வேறு அரசியலை முன்னெடுத்து வருகின்றன.
2026ம் ஆண்டு தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி ஆட்சி தான் அமையும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக, தவெக வுடன் கூட்டணி இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.