Monday, September 1, 2025

“இது தான் நீங்கள் ஆட்சி நடத்தும் லட்சணமா?” – எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவு

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நாமக்கல் விசைத்தறி தொழிலார்களுக்கு நடந்தது “கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு”; இதைச் சொல்வது தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியன் அவர்கள்.

ஒருவரின் ஏழ்மையை பயன்படுத்தி அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா? இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

சரி, நீங்கள் சொல்லும் இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்?

கிட்னி திருட்டில் தொடர்புடைய திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா?

இது தான் நீங்கள் ஆட்சி நடத்தும் லட்சணமா?

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News