வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் மற்றும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்137 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், பாஜக அதிமுக கூட்டணி மூழ்குகின்ற கப்பல் இதில் ஏறவும் வேண்டாம் இறங்கவும் வேண்டாம் என்று ஒவ்வொருவராக நினைத்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.
டிடிவி தினகரன் வெளியே வந்துவிட்டார். ஓபிஎஸ் வெளியே வந்துவிட்டார். இன்னும் யாரெல்லாம் வெளியே வரப் போகிறார்கள் என தெரியவில்லை. அது மூழ்கின்ற கப்பல். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜக அதிமுக கூட்டணியை ஏற்க மாட்டார்கள் என தெரிவித்தார்.