கடந்த சில வருடங்களில் தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாட்டில் 9.25 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில், கடந்தாண்டு 8.47 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது. கடந்த 2023ஐ காட்டிலும் 2024ம் ஆண்டில் 6.09 சதவீதம் சரிந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள இந்திய மக்கள்தொகை கணக்கீட்டின்படி மக்கள்தொகை அதே அளவில் நீடிக்க ஆண்டுதோறும் பிறப்பு விகிதம் தேசிய அளவில் 2.10 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால், இந்திய அளவில் இது 1.90 சதவீதம் உள்ளது. தமிழ்நாட்டு அளவில் 1.40 சதவீதமாக உள்ளது.
பொருளாதார நிலை, அதிகரித்து வரும் செலவு உள்ளிட்ட பல காரணங்களால் பல பெற்றோர்களும் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது.