சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில், ஓமலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது இருசக்கரவாகனத்தை மர்மநபர் திருடி சென்றார்.
இதேபோல் படையப்பாநகரில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கும் திருடப்பட்டது. சூரமங்கலம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பேக் அணிந்து வந்த இளைஞர், லாவகமாக திருடி சென்றார். சேலத்தில் அடுத்தடுத்து இருசக்கரவாகனங்கள் திருடப்பட்டு வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.