சென்னையில் பைக் டாக்சி டிரைவராக பணியாற்றிய ஒருவர் 22 வயது இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குற்றவாளி சிவகுமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், பின்னர் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டார். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பைக் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இரவு, இளம்பெண் ஒருவர் பைக் டாக்சி ஆப் மூலம் புக்கிங் செய்து, பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தோழியைச் சந்திக்கச் சென்றார். அவரை அழைத்துச் சென்றவர் சிவகுமார். அந்த நபர் பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, குற்றச்சாட்டு உண்மையென உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
