Tuesday, January 27, 2026

பீகார் தேர்தலில் அம்பலமான தில்லுமுல்லு; வெளியான அதிர்ச்சி தகவல்

பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு மகளிரின் வாக்குகளை பெறுவதற்காக ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க., கூட்டணி அரசு சார்பில் அவர்களது வங்கிக்கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. சுமார் ஒரு கோடியே 40 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த திட்டத்தில் மெகா முறைகேடு நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. அதாவது பெண்களின் வங்கிக்கணக்கில் மட்டுமின்றி ஆண்களுக்கும் முறைகேடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.இதையடுத்து ஆண்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப கேட்டு பீகார் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தை திருப்பி தர முடியாது என ஆண் பயனாளிகள் மறுப்பு தெரிவித்துள்ளார். எங்கள் வாக்குகளை திருப்பி தந்தால்தான் பணத்தை திருப்பி தருவோம், எங்கள் வாக்கால்தான் பாஜக வெற்றி பெற்றது, வாக்களித்த உடன் கணக்கு தீர்ந்துவிட்டது என்று பீகார் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

Related News

Latest News