திருப்பூரில் ரயிலில் பயணிகளுக்கு கஞ்சா கலந்து சாக்லேட்டுகளை விற்பனை செய்ததாக பீஹாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்குச் செல்லும் ரெயிலில் பயணிகளுக்கு சந்தேகத்திற்கிடமாக சாக்லேட்டுகளை விற்பனை செய்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், சாக்லேட்டுகளில் கஞ்சா கலந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.