Wednesday, October 1, 2025

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசு!

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் இரண்டு சதவீத உயர்த்தப்பட்டது. அப்போது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்தில் 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்ந்தது. இந்த நிலையில், நடப்பாண்டில் 2-வது முறையாக அகவிலைப்படி தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை, அகவிலைப்படி 3% அதிகரித்துள்ளது. அதன்படி, அகவிலைப்படி இப்போது 55% இலிருந்து 58% ஆக அதிகரித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News