இந்திய வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ். 31 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் இந்திய அணியிலும் அவரை எடுக்க மறுக்கின்றனர். குறிப்பாக பழைய பந்துகளில் சிராஜின் பந்துவீச்சு சரியில்லை என்று, கேப்டன் ரோஹித் சர்மா ஓபனாகவே பேசியிருக்கிறார்.
நடப்பு IPL தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சிராஜை 12 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. எனவே தன்னுடைய பார்மை மீட்க வேண்டிய, கட்டாயத்தில் சிராஜ் இருக்கிறார். இதற்கிடையில் அவர் பிக்பாஸ் பிரபலம் மஹிரா சர்மாவை டேட்டிங் செய்து வருவதாகத், தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்தநிலையில் சிராஜ் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். இந்த செய்தியில் துளியும் உண்மையில்லை. விரைவில் இது முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, அந்த போஸ்டினை சிராஜ் Delete செய்து விட்டார். இதேபோல மஹிராவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ”வதந்திகளை பரப்பாதீர்கள். நான் யாரையும் டேட்டிங் செய்யவில்லை,” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
என்றாலும் சிராஜ் தன்னுடைய போஸ்டினை, உடனடியாக இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியது, ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல’ பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.