Friday, December 26, 2025

பண மோசடி புகாரில் பிக்பாஸ் பிரபலம் கைது

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில், அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை.

பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News