Monday, January 19, 2026

ஹர்திக், கில், பும்ரா, ஜடேஜாவுக்கு ‘No’ ‘BCCI’ கொடுத்த Big சர்ப்ரைஸ்?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் ஒரே நேரத்தில் விலகி BCCIக்கு டன் கணக்கில் அதிர்ச்சியை பரிசளித்தனர். இதனால் விராட் இடத்தை நிரப்புவது தொடங்கி அடுத்த கேப்டன் யார்? என தேர்வு செய்வது வரை, எக்கச்சக்க நெருக்கடியில் BCCI சிக்கித் தவிக்கிறது.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழந்தால், 2027ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் BCCI இருக்கிறது. இதனால் அடுத்த கேப்டனை பார்த்து தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தநிலையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை யாருக்கு அளிப்பது? என, அண்மையில் ஆலோசனைக் கூட்டமொன்றை BCCI நடத்தியுள்ளது. அதில் காயத்தால் ஹர்திக், பும்ரா இருவரும் அடிக்கடி பாதிக்கப் படுகின்றனர். எனவே அவர்களுக்கு கேப்டன் பொறுப்பை அளிக்க வேண்டாம்.

ஜடேஜா இதுவரை கேப்டன்ஷிப் செய்ததில்லை. அவரை கேப்டனாக நியமித்து, சோதனை செய்வதற்கு நம்மிடம் கால அவகாசம் இல்லை. இளவயது வீரரான கில்லின் தலையில் கேப்டன் பொறுப்பை கட்டுவது நல்லதல்ல. எனவே அடுத்த டெஸ்ட் கேப்டன் பொறுப்பை கே.எல். ராகுலுக்கு அளிக்கலாம்,” என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

அனுபவமும், திறமையும் வாய்ந்த வீரராக இருக்கும் ராகுல் IPL தொடரிலும் அதிரடியாக ஆடி வருகிறார். அதோடு வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் அவருக்கு நல்ல அனுபவமும் இருக்கிறது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாவதற்கான எல்லா தகுதிகளும், கே எல் ராகுலுக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News