பொதுமக்களின் குடும்ப பட்ஜெட்டை மேம்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி முறையில் சில முக்கியமான மாற்றங்கள் வரவிருக்கின்றன. ஜிஎஸ்டியில் ( சரக்கு மற்றும் சேவை வரி ) 12 சதவீத வரி விகிதத்தை நீக்க அரசு தயாராகி வருகிறது. இந்த பெரிய மாற்றத்திற்கு பிரதமர் அலுவலகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இதற்கான முடிவு அங்கீகரிக்கப்படும் என்று தெரிகிறது. புதிய வரிக் கொள்கை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும். சில பொருட்களின் விலை அதிரடியாகக் குறையும். சாமானிய மக்களின் குடும்ப பட்ஜெட் மேம்படும்.
ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு மிகப்பெரிய மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இதற்கான முடிவு அங்கீகரிக்கப்படும் என்று தெரிகிறது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் இந்தக் கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.