எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமாவை தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. அந்த டிரெய்லரில் இடம்பெற்ற பல காட்சிகள், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தை போல உள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது.
இதையடுத்து, ‘ஜனநாயகன்’ படம் சுமார் 80 சதவீதம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்ற கருத்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் இந்த படம் ரீமேக்கா அல்லது முழுக்க முழுக்க ஒரிஜினல் கதையா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், பாலையா நடிப்பில் 2023ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பகவந்த் கேசரி’ திரைப்படம், தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
