கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், ஆன்லைன் முதலீட்டு மோசடியில் ரூ.1.29 கோடிக்கு மேல் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நவம்பர் 7 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், புகார்தாரரான ஜெகதீஷ் சி, குவாக் குவாக் டேட்டிங் செயலி மூலம் அடையாளம் தெரியாத நபர்களால் தொடர்பு கொள்ளப்பட்டார். அவர்கள் சர்வதேச பங்குச் சந்தைகளில் இருந்து அதிக வருமானத்தை பெற்று தருவதாக கூறி ஒரு வலைத்தளத்தில் முதலீடு செய்ய அவரை வற்புத்தியுள்ளனர்.
இதனை நம்பிய ஜெகதீஷ் ரூ.1,29,33,253 பணத்தை மாற்றியுள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், காவல்துறையை அணுகினார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
