Friday, March 28, 2025

ரூ.50 கோடிக்கு நாய் வாங்கிய நபர்….அப்படி என்ன ஸ்பெஷல்?

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ் (51). இவர் 150க்கும் மேற்பட்ட நாய் இனங்களை வைத்துள்ளார். தற்போது ‘கடாபோம் ஒகாமி’ என்ற அரிய வகை நாயை ரூ.50 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

அரிய வகை இனத்தை சேர்ந்த இந்த நாய் தினமும் சுமார் 3 கிலோ மாமிசத்தை சாப்பிடும் என கூறப்படுகிறது. இன நாய்கள் தங்கள் பாதுகாப்பு உணர்வுகளுக்குப் பெயர் பெற்றவை என்றும் அறிவாற்றல் மிகுந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது, அவர் தனது அரிய வகை நாய்களை பல்வேறு நிகழ்வுகளில் காட்டி வருமானம் பெறுகிறார். மக்கள் இவரது நாய்களுடன் செல்ஃபி எடுப்பதிலும் படங்களை எடுத்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

Latest news