பெண்கள் அணிகலன்கள் அணிவது தற்பொழுது குறைந்து விட்டது,நகை அணிவது அழகுக்கு அல்ல ஆரோக்கியத்திற்கு என்பதை உணர்த்துக்கொள்ளுங்கள்.
நகை அழகிற்கு தானே அதனால் என்ன நன்மை இருக்கிறது ?என்றுஉங்கள் மனதில் ஒரு கேள்வி எழுகிறது அல்லவா? அந்த சந்தேகத்தை தீர்க்கும் காணொளி காட்சியாக இது அமையும்.
நகை, நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி, நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.
வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவை,உடல் சூட்டை குறைத்து நம் உடலை எப்பொழுது குளிர்ச்சியாக வைத்திருக்கும்,வெள்ளி கொலுசு குதிகால் நரம்பை தொட்டுக்கொண்டிருப்பதால் குதிகால் பின் வழியாக மூளைக்கு செல்லக்கூடிய உணர்ச்சிகளை குறைத்து கட்டுப்படுத்துகிறது.
பெண்களின் கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே உள்ளது,மெட்டி அணிவதன் மூலம் அந்த நரம்புகள் சீராக செயல்படுகிறது.
அரை நாண் கொடி அணிவதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் உடலில் நடுப்பகுதியான இடுப்பில் அணியப்படும் இந்த அரை நாண் கொடியால் நம் உடல் ரத்த ஓட்டம் சீராகவும்,சமநிலையுடனும் இருக்கிறது அதுமட்டும் அல்லாமல் உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.
நம் விரல்களில் அணியும் மோதிரம் டென்ஷனை குறைக்க,குரல் வளம் இனிமையாக ,வயிறு மற்றும் இதய கோளாறுகள் நீங்கும்.சுண்டுவிரல்களில் மோதிரம் அணியாமல் இருக்க காரணம் இதய கோளாறுகள் ஏற்படலாம் என்பதால்.
மூக்கு தொடர்பான பிரச்னைகள் உருவாவதை தடுக்க மூக்குத்தி உதவுகிறது ,காதணி அணிவதால் கண் பார்வையை சீராக்கலாம்,வயிறு மற்றும் அஜிரணம் போன்ற கோளாறுகள் சீராகும்.
இதுபோன்ற எண்ணற்ற பயன்களை அணிகலன்கள் தருவதால்,அணிகலன்களை அணிந்து அதன் பயனை பெறுவோம்