உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம். ஆனால், தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்றால், எளிமையான ஒரு வழி – படிக்கட்டில் ஏறுவது.
தினமும் படிக்கட்டில் ஏறும் பழக்கம் கொண்டவர்கள், அதிக நாள் ஆரோக்கியமாக வாழும் வாய்ப்பு அதிகமாகும் ஆய்வுகள் கூறுகிறது. படிக்கட்டில் ஏறும் பழக்கம் இருப்பவர்களுக்கு இது மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கும்.
படிக்கட்டில் ஏறுவதால் உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கொழுப்பு சத்துக்கள் குறைகின்றன. இதனால் இரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் கொழுப்பு குறைய உதவும்.
தினசரி வாழ்க்கையில், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் பயன்படுத்தாமல் படிக்கட்டில் ஏறும் பழக்கத்தை கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.