குளிர்காலம் என்றாலே உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும். எனவே, நாம் நமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் எடுத்துக் கொள்ளும் பொருட்களில் இஞ்சியும் ஒன்று. குளிர்காலத்தில் இஞ்சியின்(Ginger) பயன்பாடு மிகவும் பிரபலமானது.
குளிர்காலத்திற்கு ஏற்ற இஞ்சியின் நன்மைகள்
குளிர் காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து குளிர்போக்கு, சளி போன்ற நோய்களை தடுக்கும்.
இஞ்சியில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் உள்ளதால் உடல் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
குளிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு, தசை வலிகள், உடல் வலியை குறைக்கும் பண்பும் கொண்டது.
இஞ்சியை கொண்டு தயாரிக்கும் கஷாயங்கள் உடல் வலிமையை அதிகரித்து, நோய்களைத் தடுக்க உதவுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்
இஞ்சியின் தீமைகள்
இஞ்சியை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் மற்றும் உடல் சூடு போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். எனவே, தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்துவது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)
