Wednesday, January 15, 2025

புற்றுநோயால் பாதித்த குழந்தைகளை மகிழ்விக்கும் நபர்

புற்றுநோய் இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொடிய நோயாக பார்க்கப்படுகிறது . தொற்றா நோய்களில் இதுவே அதிகமான உயிர்களை பறிக்கிறது என தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள். அனைத்து வயதினரும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் . இதில் சிறு வயதினரும் பாதிக்கப்படுவது தான் வேதனை.

எகிப்த் நாட்டை சேர்ந்த ஒருவர் இதுபோன்று புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை தன் பாட்டால் மகிழ்வித்து வருகிறார். பொதுவாக இதுபோன்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தங்கள் கூட பணிவிடை செய்ய தயங்குவர்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் பிரத்தேகமாக மையம் அமைத்து அரவணைத்து வருகின்றனர்.

எகிப்திய மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர நடத்தை சிகிச்சையாளரான முபீத், கோமாளியாக உடை அணிந்து குழந்தைகள் அருகில் அமர்ந்து கிட்டார் இசைத்து பாடல் படுகிறார் . இதுவும் ஒரு வகையான சிகிச்சை என கூறும் அவர் ,

நீங்கள் ஒருவரை விருப்பினால் அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை. தினம்தினம் வலியுடன் மருந்து , சிகிச்சை என இருக்கும் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம் இதைத்தான் குழந்தைகளும் விரும்புவர் என்கிறார்.

மருத்துவமனையில் குழந்தைகள் இவருக்கு வைத்துள்ள பெயர் ” நைட்டிங்கேல் ” ஆம் அதாவது ஒருவகை பாடும் பறவை . இவர் வந்துவிட்டாலே அக்குழந்தைகள் ஆனந்தத்துடன் அவர் பாடலை ரசிக்கின்றனர் மேலும் இவருடன் ஆர்வத்துடன் புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர் குழந்தைகள்.

Latest news