Sunday, January 25, 2026

பெண்களை திட்டிய நிதிஷ் குமார்., பேசிக்கொண்டிருக்கும் போது பாதியில் எழுந்து சென்றதால் ஆத்திரம்

பீகார் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசி கொண்டிருந்த போது, பெண்கள் எழுந்து சென்றதால், அவர் பொறுமையை இழந்து, பாதியில் எழுந்து சென்ற பெண்களை மேடையிலேயே திட்டினார்.

பீகாரில் மாநிலம் சிவான் மாவட்டத்தில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை முதலமைச்சர் நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், பெண்களுக்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.

அப்போது அங்கிருந்த சில பெண்கள் எழுந்து சென்றனர். இதனை பார்த்து கோபமடைந்த நிதிஷ் குமார், ஏன் அனைவரும் ஓடுகிறீர்கள்? என்று கூறி சத்தமிட்டார். இதன் காரணமாக சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Related News

Latest News