இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) வருவாய் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2019-ரூ.6,059 கோடியாக இருந்த வங்கி இருப்பு, தற்போதைய நிலவரப்படி ரூ.20,686 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
அதே நேரத்தில் சர்வதேச விளையாட்டுகளில் இருந்து கிடைக்கும் ஊடக உரிமை வருமானம் ரூ.813.14 கோடியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பி.சி.சி.ஐ. தொடர்ந்து பல கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தி வருகிறது.