Friday, August 22, 2025
HTML tutorial

‘அடம்பிடித்த’ Mitchell Starcஐ மொத்தமாக ‘செஞ்சுவிட்ட’ BCCI

நடப்பு IPL தொடரில் நன்றாக செயல்பட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி, வெளிநாட்டு வீரர்கள் விலகல்களால், மொத்தமாகத் தடுமாறி விட்டது. மாற்று வீரர்களை தேட முடியாத சூழலால் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் Mitchell Starcஐ, ஓரிரண்டு போட்டிகள் ஆடும்படி கேட்டுக் கொண்டது.

ஆனால் மீண்டும் அணிக்குத் திரும்ப முடியாது என்று, Starc திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டாராம். இவர்மீது நம்பிக்கை வைத்து 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு, டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. கொடுத்த காசுக்கு ‘ஆஹா ஓஹோ’ என்று செயல்படாவிட்டாலும், 11 போட்டிகளில் ஆடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முக்கிய போட்டிகளில் ஆட்டத்தை திருப்பக்கூடிய திறமை இருப்பதால் தான் டெல்லி, இவரை நம்பி ஏலத்தில் எடுத்தது. ஆனால் நம்பிக்கையை சிதைப்பது போல, டெல்லியின் முதுகிலேயே குத்தி விட்டார். BCCI பேச்சுவார்த்தை நடத்தியும் கூட, மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாட Starc மறுத்து விட்டாராம்.

இதனால் Mitchell Starcகிற்கு ரூபாய் 3 கோடியை அபராதமாக விதிக்க, BCCI முடிவு செய்துள்ளதாம். அதேநேரம் மற்றொரு ஆஸ்திரேலிய பவுலரான Hazelwood பெங்களூரு அணிக்காக, Play Off போட்டியில் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News