Monday, December 1, 2025

உலக கோப்பையில் விளையாட ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ அறிவுரை

2027 ஒரு நாள் உலக கோப்பையில் விளையாட ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித்சர்மா, ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில், 2027 ஒரு நாள் உலக கோப்பைக்கு முன் ரோகித் சர்மா 40 வயதை எட்டிவிடுவதால், அவர் உலக கோப்பையில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், தனது எதிர்காலம் குறித்து ஊடகங்களுக்கு எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து, 2027 ஒரு நாள் உலக கோப்பையில் விளையாடும் வகையில் உடற்தகுதியில் கவனம் செலுத்துமாறும், ரோகித் சர்மாவை பிசிசிஐ அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News