Wednesday, April 2, 2025

இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக ரம்ஜான் பண்டிகை அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால் இந்த வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது. எனவே 2024-25ம் நிதியாண்டின் கணக்குகளை அரசு மார்ச் 31ம் தேதியுடன் முடிக்க வேண்டும். இதற்காக மார்ச் 31 ஆம் தேதி வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை இன்றைய தினம் செலுத்தலாம் என அறிவித்துள்ளது.

Latest news