Friday, December 26, 2025

எக்ஸ்ட்ரா டைம் வேலை சொன்னதால் ஆத்திரம் : வங்கிக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்..!

சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முகப்பேர் சாலையில் யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு ஆண் ஒருவர் தொலைபேசியில் அழைத்து வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் யாரோ ஒருவர் விளையாட்டுக்கு சொல்வதாக நினைத்து அன்றாட பணியை மேற்கொண்டுள்ளனர்.

மீண்டும் மீண்டும் என நான்கு முறை தொலைபேசியில் அழைத்து வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை உடனடியாக வெளியேற்றினார்.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக ஊழியர்கள் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொரட்டூர் மற்றும் எஸ்டேட் காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வங்கியின் உள்ளே சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அது புரளி என தெரியவந்துள்ளது.

இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வங்கியில் பணிபுரியும் ஊழியர்களை மாலை 6:00 மணி கடந்தும் பணியை செய்ய சொல்லி நிர்பந்தம் படுத்துவதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர் ஒருவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் மூலம் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை கொண்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விழித்துள்ளது பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News