Friday, August 29, 2025
HTML tutorial

மொத்தம் 14 நாட்கள்.., செப்டம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை.!

செப்டம்பர் மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் பல நகரங்களில் வங்கிக் கிளைகள் 14 நாட்கள் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஆன்லைன் வங்கி சேவைகள் எப்போதும் போல செயல்படும்.

வங்கி விடுமுறைப் பட்டியல்

செப்டம்பர் 3 (புதன்கிழமை): கர்மா பூஜை – ஜார்கண்ட்
செப்டம்பர் 4 (வியாழக்கிழமை): முதல் ஓணம் – கேரளா
செப்டம்பர் 5 (வெள்ளிக்கிழமை): ஈத்-இ-மிலாத் / மிலாத்-உன்-நபி – குஜராத், மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகண்ட், ஆந்திர பிரதேசம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், கேரளா, டெல்லி, ஜார்கண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விடுமுறை.
செப்டம்பர் 6 (சனிக்கிழமை): ஈத்-இ-மிலாத் / இந்திரஜாத்ரா – சிக்கிம், சத்தீஸ்கர்
செப்டம்பர் 12 (வெள்ளிக்கிழமை): மிலாதுல் நபி பண்டிகையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை – ஜம்மு காஷ்மீர்
செப்டம்பர் 22 (திங்கட்கிழமை): நவராத்திரி ஸ்தாபனா – ராஜஸ்தான்
செப்டம்பர் 23 (செவ்வாய்கிழமை): மகாராஜா ஹரி சிங் ஜியின் பிறந்தநாள் – ஜம்மு காஷ்மீர்
செப்டம்பர் 29 (திங்கட்கிழமை): மகா சப்தமி / துர்கா பூஜை – திரிபுரா, அசாம், மேற்கு வங்காளம்
செப்டம்பர் 30 (செவ்வாய்கிழமை): மகா அஷ்டமி / துர்கா பூஜை – திரிபுரா, ஒடிசா, அசாம், மணிப்பூர், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட்

வார இறுதி விடுமுறை நாட்கள்

செப்டம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) – அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
செப்டம்பர் 13 (சனிக்கிழமை) – இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை – அனைத்து வங்கிகளும் மூடப்படும்
செப்டம்பர் 14 (ஞாயிற்றுக்கிழமை) – அனைத்து வங்கிகளும் மூடப்படும்
செப்டம்பர் 21 (ஞாயிற்றுக்கிழமை) – அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
செப்டம்பர் 27 (சனிக்கிழமை) – நான்காவது சனிக்கிழமை விடுமுறை – அனைத்து வங்கிகளும் மூடப்படும்
செப்டம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை) – அனைத்து வங்கிகளும் மூடப்படும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News