பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மார்ச் 24, 25 தேதிகளில் 48 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
இம்மாதத்தில் மார்ச் 22ம் தேதி 4வது சனிக்கிழமையாகும். அதற்கு மறுநாள்(மார்ச் 23) ஞாயிறு விடுமுறை. மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் போராட்டம் நடைபெற உள்ளது. எனவே மொத்தமாக 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.