தனது புகைப்படங்களை பயன்படுத்தி வருமானம் பார்க்கும் சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், யூடியூப் சேனல்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் அமர்வில் அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெயர் புகைப்படங்களை பயன்படுத்தினால் என்ன தவறு. அதனால் உங்கள் புகழ் பரவும் தானே என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு இளையராஜா தரப்பு, என் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி வருவாய் ஈட்டுகிறார்கள். எனவே தன்னை அடையாளப்படுத்தும் வகையில் பெயர், புனைப்பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, வருவாய் நோக்குடன் சமூகவலைதளங்களில் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
