தமிழகத்தில் பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தடையானது ஓராண்டு வரை அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மயோனைஸ் என்பது கிரில் சிக்கன், பிரென்ச் பிரைஸ் உள்ளிட்டவைகளுக்கு தொட்டு கொள்ள பயன்படுத்தப்படுகிறது. பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முறையற்ற தயாரிப்பு, சேமிப்பு வசதிகள், நுண்ணுயிரிகளால் ஏற்படும் மாசுபாடு ஆகியவை பொது சுகாதார அபாயத்தை உருவாக்குகின்றன என சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.