கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது இரண்டு மாணவர்கள் அரசியல் கட்சி துண்டுகளை போட்டுகொண்டு நடனம் ஆடியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனி திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பி நடனம் ஆடுவது, ஜாதி சின்னங்கள் வைத்துக் கொள்வது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான புகார்கள் வந்தால், தலைமை ஆசிரியர் மீதும் மற்ற ஆசிரியர்கள் மீதும் கடுமையான நடிவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.