நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
கடந்தாண்டு செப்டம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில், நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழல் மற்றும் வாரிசு அரசியலை எதிர்த்தும் ‘ஜென்சி’ அமைப்பினர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.
அந்தப் போராட்டத்தில் நடந்த ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 76 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்குமுறையில் பங்கு இருப்பதாகத் தெரிவித்து முன்னாள் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, அப்போதைய உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகக் ஆகியோர் கடந்த மார்ச் 28ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நேபாள உச்சநீதிமன்றம், நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது.
