Thursday, December 26, 2024

“அந்த குரங்கு குட்டியை விடுவீங்க…” ஒன்றுகூடிய இணையவாசிகள்

மனிதனை போல புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்று குரங்குகள்.அவைகள் சுதந்திரமாக மரங்களில்  சுற்றித் திரிவதையே விரும்புகிறது.

ஆனால்,மனிதர்களால் கூண்டுகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.இதில் இணையத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது,அதில் குட்டி குரங்கு ஒன்று கண்ணாடி கூண்டில் அடைபட்டுள்ளது.

கூட்டிலிருந்து தப்பிக்க அங்கு இருந்த பாறையின் துண்டு ஒன்றை கையில் எடுத்து அந்த கண்ணாடியை அடிக்கிறது.சில முறை அடித்தவுடன் அந்த கண்ணாடி வெடித்து விரிசல் விடிகிறது.அப்போது எழுமிய சத்தத்தில் பயந்துபோன அந்த குட்டி குரங்கு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து  பல இன்ஸ்டாகிராம் பயனர்கள் குட்டி குரங்குக்காக மிகவும் வருத்தமாக இருப்பதாகவும், அதை விடுவிக்க வேண்டும் என்றும் கருத்தை பதிவிட்டுவருகின்றனர். 

Latest news