Friday, May 9, 2025

தாயின் வயிற்றுக்குள் ‘வாரிசு’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் குழந்தை!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னதாகவே ஹிட் அடித்த பாடல்கள், இன்னும் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில், கர்ப்பிணி ஒருவர் தனது வயிற்றில் உள்ள குழந்தை ‘ரஞ்சிதமே’ பாடல் கேட்டுத் தான் முதன் முதலில் அசைவு கொடுத்ததாகவும், தற்போது அந்த பாடலை எப்போது கேட்டாலும் குழந்தை ஆடுவதாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

வயிற்றிலேயே தனது குழந்தை விஜய் fanஆக மாறிவிட்டதாக கூறும் அவர், ‘வாரிசு’ ஒரு எமோஷனல் ஆன படம் என்றும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Latest news