வெளியிடங்களுக்கு சிறு குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் போது மிகவும் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்,
சிறிதளவு அஜாக்கிரதையாக இருந்தாலும் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம், எனவே சிறு குழந்தைகளைப் பாதுகாப்பாகவும் அரவணைத்தபடி கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது பேபி கேரியர். அவரவர் வசதிக்கு ஏற்ப நவீன வடிவங்களில், இன்றைய டிரெண்டிற்கு இணையாகப் பல பேபி கேரியர்கள் கிடைக்கிறது.
இந்த கேரியரில் முன் மற்றும் பின்புறங்களில் குழந்தைகளை உட்கார வைக்கலாம், ஹனிகோம்ப் என்னும் துணிவகையில் நெய்வதால், குழந்தைகளில் பட்டுப் போன்ற சருமத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் மிதமாகவும் மிருதுவாகவும் அமையும். பின் புற கேரியரில் குழந்தைகள் கீழே விழாமல் இருக்க சீட் பெல்டு வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல பால்புட்டி வைக்கும் வசதியும் உள்ளது.
ஆனால் நம் நாட்டில் சில பெண்கள் இடுப்பில் குழந்தையை வைத்துச் செல்வதையே விரும்புவார்கள், இவர்களுக்காகவே ஹிப் சீட் கேரியர்கள் இருக்கிறது, இதுவும் குழந்தைகளைப் பாதுகாப்பாகத் தூக்கி செல்வதற்கு உதவியாக இருக்கும்.
அதுபோல குழந்தைகள் தூங்கும்போது பயன்படுத்தும் படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது ஸ்லிஸ் ரிங் பேபி கேரியர், இது மிருதுவான துணியைக் கொண்டு உருவாக்கப்பட்டதால் குழந்தைகளுக்கு நல்ல உறக்கத்தை ஏற்படுத்தும் . எனவே எல்லாவிதமான பேபி கேரியர்களையும் தாய்மார்கள் தயக்கமில்லாமல் வாங்கலாம்.